தமிழ்நாடு

'தலைவி' படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஜெ.தீபா தடாலடி மனு

1st Nov 2019 01:52 PM

ADVERTISEMENT

 

தலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தனது அனுமதியின்றி 'தலைவி' படம் எடுக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் ஜெ.தீபா திடீரென வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தங்களது குடும்பத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம். எனவே தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கூடாது. ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT