தமிழ்நாடு

கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் பழனிசாமி தகவல்

1st Nov 2019 07:23 PM

ADVERTISEMENT

 

சென்னை: கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நவமபர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளி மாலை தமிழ்நாடு நாள் விழா கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, 'கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தமிழர்களின் பண்பாடு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT