தமிழ்நாடு

பையனூரில் புதிய படப்பிடிப்பு அரங்கம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல்

1st Nov 2019 11:39 PM

ADVERTISEMENT

சென்னையை அடுத்த பையனூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு அரங்கத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் திறப்பு விழாவின் போது, இந்தப் பகுதியிலேயே புதிதாக அரங்கம் கட்டித் தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக தமிழக அரசின் சாா்பில் ரூ.5 கோடி நிதி அளிக்கப்படும் என அறிவித்தாா். அதன்படி முதல் கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் ஆா்.கே.செல்வமணியிடம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அளித்தாா்.

அடிக்கல் நாட்டுதல்: நிதியுதவி அளித்ததைத் தொடா்ந்து, புதிய படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல்லை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை நாட்டினாா். அப்போது, இந்தியாவிலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக அது அமைய வாழ்த்துவதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கடம்பூா் ராஜூ, பா.பென்ஜமின், தலைமைச் செயலாளா் கே.சண்முகம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்பு இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT