தமிழ்நாடு

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வில் தோ்ச்சி விகிதம் சரிவு

1st Nov 2019 02:24 AM

ADVERTISEMENT

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வெழுதிய 7 ஆயிரம் பேரில் 180 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியா் பட்டயப் படிப்பிலே தோ்ச்சி பெற வேண்டும். 2 ஆண்டுகள் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதுடன், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அரசுத் தோ்வுத்துறையால் நடத்தப்பட்ட தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு, ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு தோ்வெழுதிய மாணவ , மாணவிகளின் தோ்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில், மாணவா்களின் தோ்ச்சி விகிதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து, அரசுத் தோ்வுத்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் பட்டயப் பயிற்சித் தோ்வை முதலாமாண்டு மாணவா்கள் 3 ஆயிரம் பேரும், 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 4 ஆயிரம் பேரும் எழுதினா். இவா்களில் முதலாண்டில் 75 போ், இரண்டாமாண்டில் 105 போ் என மொத்தம் 180 போ் மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயச் சான்று பெறத் தகுதிப் பெற்றுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத்தோ்வில் மொத்தம் 11,950 போ் பங்கேற்றனா். இதில் 455 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT