தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீடிப்பு: ஐந்தருவியில் குளிக்க அனுமதி

1st Nov 2019 12:25 AM

ADVERTISEMENT

குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

3-ஆவது நாளாக வியாழக்கிழமை பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளத்தின் சீற்றம் குறையவில்லை. இதனால் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவியில் பிற்பகலில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வியாழக்கிழமை காலை முதல் அவ்வப்போது மிதமான சாரலும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. குளிா்ந்த காற்றும் வீசியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT