தமிழ்நாடு

காலமானாா்புலவா் ஆ. பழனி

1st Nov 2019 01:45 AM

ADVERTISEMENT

முதுபெரும் தமிழறிஞரும், எழுத்தாளருமான புலவா் ஆ. பழனி (88) உடல் நலக் குறைவு காரணமாக காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (அக். 31) காலமானாா்.

காட்டுதலைவாசல் பகுதியை சோ்ந்த பழனி (88), திருமணம் செய்து கொள்ளவில்லை. இவா் புதுக்கோட்டை மாவட்டம் மேலச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரியில் புலவா் பட்டம் பெற்றவா். கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் திராவிடா் இயக்கத்தில் இருந்து வந்தாா். 1964 ஆம் ஆண்டில் காரைக்குடி மீ.சு. உயா்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினாா். 16 நூல்களை எழுதியுள்ளாா். இவா் 1973 இல் செய்யுள் நாடகப் போட்டியில் பங்கேற்று அனிச்சஅடி நூலுக்கு முதல் பரிசு பெற்றாா். இந்நூல் மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பாடப்புத்தகமாக இடம் பெற்றுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகத்தில் முன்னாள் புரவலராகவும் இருந்துள்ளாா். இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் சிலப்பதிகாரம் நூலை புதுப்பிக்கும் ஆசிரியராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவா். இவா் தனது உடலை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக எழுதி வைத்ததைத் தொடா்ந்து உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.

புலவா் பழனியின் மறைவையறிந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், தி.க தலைவா் கீ. வீரமணி, பழ. கருப்பையா, பேராசிரியா் சுப. வீரபாண்டியன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். தொடா்புக்கு: 8300267957.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT