வியாழக்கிழமை 27 ஜூன் 2019

டெட் தேர்வு நுழைவுச்சீட்டு:  தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு

DIN | Published: 31st May 2019 01:39 AM


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1 மற்றும் தாள்- 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 8, 9  ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.  இந்தத் தகுதித்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் கடந்த மே 26-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. 
சில தேர்வர்கள் பயனியர் குறியீடு,  கடவுச்சொல் ஆகியவற்றை மறந்துவிட்டதால் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. இந்த முறையினை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வடதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
9 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜிகளாக பதவி உயர்வு
சென்னை அருகே புதிய நீர்த்தேக்கம்: 3 மாதங்களில் பணிகள் முடியும்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்: இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை