குன்னூர் - ரன்னிமேடு இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோடைப் பருவத்தையொட்டி, ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரையிலான குறுகிய தூர சிறப்பு ரயில் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
ரன்னிமேடு புறப்படத்  தயாராக உள்ள  சிறப்பு  ரயில்.
ரன்னிமேடு புறப்படத்  தயாராக உள்ள  சிறப்பு  ரயில்.


கோடைப் பருவத்தையொட்டி, ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரையிலான குறுகிய தூர சிறப்பு ரயில் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
கோடைப் பருவத்தையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.
இந்த ரயிலில் மூன்று பெட்டிகள் உள்ளன. இதில், முதல் வகுப்பில் 56 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 30 இருக்கைகளும் உள்ளன. இந்த ரயிலின் இயக்கம் திங்கள்
கிழமை தொடங்கியது. குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு  நண்பகல் 12 மணி அளவில் ரன்னிமேடு ரயில் நிலையம் வந்தடைந்தது. 
மீண்டும் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு  புறப்பட்டு 1.30 மணியளவில் குன்னூர் வந்தடைந்தது. மலைக் குன்றுகள், அருவிகள், குகைகள், பள்ளத்தாக்குகள், ரன்னிமேடு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் இந்தக் கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீர், தின்பண்டங்கள்  ஆகியவை வழங்கப்பட்டன. இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்புக்கு ரூ.450-உம், இரண்டாம் வகுப்புக்கு ரூ.320-உம் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்கள், தேநீர், பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ஆகியவை இந்தக் கட்டணத்திலேயே அடங்கும். இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய குன்னூர் ரயில் நிலைய  அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com