அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி நடத்த ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சியகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி நடத்த ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சியகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
தமிழகத்தில் அரசு சார்பில் சென்னை, மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன. 
இந்த அருங்காட்சியகங்களில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, கருங்கற்கள், கற்சிலைகள், உலோகச் சிலைகள், நாணயங்கள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுக்கால சின்னங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளுக்கான சான்றுகளும், அரிய வகையான புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பார்ப்பதற்காக உள்ளூர்வாசிகளும், வெளிநாட்டினரும் வருகின்றனர். 
இவர்களுக்கான கட்டணம் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகங்களில் அவ்வப்போது மாணவர்களுக்கு ஓவியப் போட்டி உள்பட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை மெருகேற்றும் வகையில், இனி மாதந்தோறும் தபால் தலைகள், ஓவியங்கள் என ஏதேனும் ஒரு தலைப்பைக் கொண்டு கண்காட்சி நடத்த அருங்காட்சியக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி இனி மாதந்தோறும் அருங்காட்சியகங்களில் மாணவர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதுமையான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 
இதுகுறித்து அருங்காட்சியக அதிகாரிகள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் உள்ள அரசு அருங்காட்சியகங்களில் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் மாதந்தோறும் இனி ஏதேனும் ஒரு தலைப்பில் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ஒரு அருங்காட்சியகத்துக்கு ரூ.25 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com