இடைத்தேர்தல்: 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி 

தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 8 தொகுதிகள் வரை வெற்றியை உறுதி செய்ததன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. 
இடைத்தேர்தல்: 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி 

தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 8 தொகுதிகள் வரை வெற்றியை உறுதி செய்ததன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. 

தமிழகத்தில் ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, குடியாத்தம், அரூர், ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பாப்பிரெட்டிபட்டி,  பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர், சூலூர், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருவாரூர், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டன. இதன்முடிவுகள் இரவு 8 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அதன்படி, எட்டு தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுக வெற்றி முகம் காட்டியது. அவற்றில் சில தொகுதிகளுக்கான முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.

அதிமுக வெற்றி:  விளாத்திகுளம் தொகுதியில் 28 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் வெற்றி பெற்றார். சோளிங்கர் தொகுதியில் 16 ஆயிரத்து 56 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத்தும், சாத்தூர் தொகுதியில்  1,101 வாக்குகள் அதிகம் பெற்று எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனும் வெற்றி பெற்றனர். 

திமுக வெற்றி: ஆம்பூரில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஏ.சி.வில்வநாதனும், குடியாத்தம் தொகுதியில் 27 ஆயிரத்து 841 வாக்குகள் அதிகம் பெற்று எஸ்.காத்தவராயனும், திருப்போரூர் தொகுதியில் 21 ஆயிரத்து 13 வாக்குகள் அதிகம் பெற்று எல்.இதயவர்மனும் வெற்றி பெற்றனர். 
ஆட்சியைத் தக்க வைத்தது: இடைத் தேர்தலில் 9 தொகுதிகள் வரை வெற்றிக் கோட்டை எட்டியிருப்பதன் மூலம், சட்டப் பேரவையில் ஆளும் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. பேரவையில் 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 113-ஆக இருந்தது (பேரவைத் தலைவரைச் சேர்க்காமல்). 9 தொகுதிகள் வரை வெற்றி முகம் காட்டியிருப்பதன் மூலம், பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆக உயருகிறது. அதேசமயம், பேரவையில் எந்த இடமும் காலியாக இல்லாத சூழ்நிலையில், பெரும்பான்மை பெற வேண்டிய எண்ணிக்கை 117 ஆகும். பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆக அதிகரித்ததன் மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேரவையில் அதிமுகவுக்கு இருந்து வந்த பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துள்ளன.

100-ஐத் தாண்டியது திமுக: இடைத் தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.

பேரவையில் கட்சிகள் பலம்

(தேர்தல் முடிவுக்குப் பிறகு)
மொத்த இடம்    234
அதிமுக    122 
திமுக    101
காங்கிரஸ்    8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்     1
சுயேச்சை    1
பேரவைத் தலைவர்    1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com