புதன்கிழமை 26 ஜூன் 2019

வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால கட்டுமானப்பணி: சனி, ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவையில் மாற்றம்

DIN | Published: 24th May 2019 04:59 AM

சென்னை-அரக்கோணம் பிரிவில்,  திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே வேப்பம்பட்டு ரயில்நிலைய யார்டில் பயணிகள் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால், சனிக்கிழமையும் (மே 25), ஞாயிற்றுக்கிழமையும் (மே 26) ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இரவு 9.15 10.10, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், மூர் மார்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு இரவு  9.40, 11.10, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், மூர் மார்க்கெட் வளாகம்-பட்டாபிராம் பகுதிக்கு இரவு 9.40, 10.35  ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-ஆவடிக்கு இரவு 9.45, 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 
அதேபோல, மூர் மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இரவு 10, 11.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர்-மூர் மார்க்கெட் வளாகத்துக்கு  8.50, 9.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராம்-ஆவடிக்கு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர் மார்க்கெட் வளாகத்துக்கு 10.45 இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் -ஆவடிக்கு இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருத்தணி-மூர் மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மாலை 6.55, இரவு 9.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம்-ஆவடிக்கு இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சேவையில் மாற்றமுள்ள ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம்-திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலின் சேவை, அரக்கோணம் வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. 
இந்த ரயில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும்.
அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில் அரக்கோணம்-ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஆவடியில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.
97 ரயில் சேவைகள் (ஞாயிறுக்கிழமை) முழுமையாக ரத்து: மூர்மார்க்கெட் வளாகத்தில்  இருந்து இயக்கப்படும் 30 மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து 9 மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து 3 மின்சார ரயில்கள்,
திருவள்ளூர், எண்ணூரில் இருந்து தலா ஒரு மின்சார ரயில் என்று  மொத்தம்  44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல, மறுமார்க்கமாக ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் பகுதி, திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணம், பொன்னேரி, வேலூர் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இயக்கப்படும் 39 மின்சார ரயில்கள், சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 11 மின்சார ரயில்கள், வேளச்சேரி,  பொன்னேரி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் தலா ஒரு மின்சார ரயில் என்று மொத்தம் 53 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 
இதுதவிர, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள்  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர்: ஆணையம் உத்தரவு
பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்: நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
சட்டவிரோத பேனர்: அரசு இன்று விளக்கம் அளிக்க உத்தரவு
போதையில் இருந்து புதிய பாதைக்கு...அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் பேருக்கு மறுவாழ்வு சிகிச்சை!