காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் ஐக்கிய வழிபாடு

 காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் ஐக்கிய வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு புறப்பாடான திருஞான சம்பந்தர்.
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு புறப்பாடான திருஞான சம்பந்தர்.


 காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் ஐக்கிய வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், தேவாரம் அருளித் தந்தவருமான திருஞான சம்பந்தர் ஐக்கியமான வைகாசி மூல நட்சத்திரத்தில், காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் ஐக்கிய வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பகல் 12 மணியளவில் உற்சவ மூர்த்தியான திருஞான சம்பந்தரை கைலாசநாதர் முன்பாக எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக கோயிலில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னிதியில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
இரவு நிகழ்ச்சியாக, உற்சவ மூர்த்தியான திருஞான சம்பந்தருக்கு கொன்றை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிவ வாத்தியங்களுடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. மீண்டும் கோயிலை வந்தடைந்ததும், திருஞானசம்பந்தரை, மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதர் முன்பாக எழுந்தருளச் செய்து, இறைவனிடம் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com