செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி 

DIN | Published: 22nd May 2019 02:29 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மறுநாள் ஒருவரும், காயமடைந்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்?  தமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவின் கீழ் அனுப்பிய சம்மன்களில் இறுதிமுடிவு எடுக்கக் கூடாது என்றும 107, 111 பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மனும் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை
விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம்: தமிழக அரசு அரசாணை
தங்க தமிழ்செல்வனுக்கு மனநிலை சரியில்லை: வெற்றிவேல் பேச்சு
என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்: தங்க தமிழ்செல்வன் பரபரபப்பு பேட்டி
தங்கதமிழ்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ: தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்!