அரசு ஊழி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு

தமி​ழக அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு அளித்து மாநில அரசு உத்​த​ர​விட்​டுள்​ளது. இதற்​கான அரசு உத்​த​ரவை மாநில நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் திங்​கள்​கி​ழமை
அரசு ஊழி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு

தமி​ழக அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு அளித்து மாநில அரசு உத்​த​ர​விட்​டுள்​ளது. இதற்​கான அரசு உத்​த​ரவை மாநில நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்​டார். 
தமி​ழ​கத்​தில் அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி அக​வி​லைப்​படி உயர்வு அறி​விக்​கப்​பட்​டது. அதன்​படி, அடிப்​படை ஊதி​யத்​தில் 9 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு பெறும் வகை​யில் அறி​விப்பு வெளி​யா​னது.
விலை​வாசி உயர்​வைக் கணக்​கில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜன​வரி மற்​றும் ஜூலை மாதங்​க​ளில் அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்​கான அக​வி​லைப்​படி உயர்த்தி அளிக்​கப்​பட்டு வரு​கி​றது. மத்​திய அரசு எப்​போ​தெல்​லாம் தனது ஊழி​யர்​க​ளுக்கு அக​வி​லைப்​ப​டியை உயர்த்தி வழங்​கு​கி​றதோ, அப்​போ​தெல்​லாம் தமி​ழக அர​சும் அக​வி​லைப்​ப​டியை உயர்த்தி அளிக்​கும். அந்த வகை​யில், கடந்த ஆண்டு ஜூலை​யில் மத்​திய அர​சின் அறி​விப்​பைத் தொடர்ந்து, தமி​ழக அர​சும் அறி​விப்பு வெளி​யிட்​டது.
ஜன​வரி மாதத்​துக்​கான அக​வி​லைப்​ப​டியை மூன்று சத​வீ​தம் உயர்த்தி மத்​திய அரசு கடந்த பிப்​ர​வரி 20-இல் அறி​விப்பு வெளி​யிட்​டது. மக்​க​ள​வைத் தேர்​தல் தேதி அறி​விப்பு கார​ண​மாக, தமி​ழக அரசு அக​வி​லைப்​படி உயர்வு அறி​விப்பை வெளி​யி​டா​மல் இருந்​தது. நான்கு சட்டப்​பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கான இடைத்​தேர்​தல் முடி​வ​டைந்த பிறகு அக​வி​லைப்​படி உயர்வு அறி​விப்பை வெளி​யிட தேர்​தல் ஆணை​யம் ஒப்​பு​தல் அளித்​தி​ருந்​தது. அதன்​படி, இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடி​வ​டைந்த நிலை​யில் அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்​கான அக​வி​லைப்​படி உயர்வு அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.
இது​கு​றித்து, தமி​ழக அர​சின் நிதித்​துறை கூடு​தல் செய​லா​ளர் க.சண்​மு​கம் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்ட உத்​த​ரவு விவ​ரம்:
தமி​ழக அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு இப்​போது 9 சத​வீ​தம் அக​வி​லைப்​படி அளிக்​கப்​பட்டு வரு​கி​றது. இந்த அக​வி​லைப்​ப​டி​யா​னது 12 சத​வீ​த​மாக உயர்த்தி அளிக்​கப்​ப​டும். அடிப்​படை ஊதி​யத்​தில் 12 சத​வீ​தம் அள​வுக்கு அக​வி​லைப்​படி வழங்​கப்​ப​டும். இந்த அக​வி​லைப்​படி உயர்​வா​னது ஜன​வரி 1-ஆம் தேதி முதல் முன்​தே​தி​யிட்டு அளிக்​கப்​ப​டும். ஜன​வரி முதல் ஏப்​ரல் வரை​யி​லான நிலு​வைத் தொகை​கள் உட​ன​டி​யாக அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளின் சம்​ப​ளக் கணக்​கில் வரவு வைக்​கப்​ப​டும். 
​வேறு யாருக்​கெல்​லாம் கிடைக்​கும்:​ உயர்த்தி அளிக்​கப்​பட்ட அக​வி​லைப்​ப​டி​யா​னது, அரசு நிதி​யு​தவி பெறும் கல்வி நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​றும் ஆசி​ரி​யர்​கள், ஆசி​ரி​யர்​கள் அல்​லா​தோர், உள்​ளாட்சி அமைப்​பு​க​ளில் பணி​யாற்​று​வோர், அரசு நிதி​யு​தவி பெறும் பாலி​டெக்​னிக் கல்வி நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​றும் ஆசி​ரி​யர்​கள், உடற்​கல்வி இயக்​கு​நர்​கள், நூல​கர்​கள் ஆகி​யோ​ருக்​கும், வரு​வாய்த் துறை கிராம உத​வி​யா​ளர்​கள், மதிய உணவு அமைப்​பா​ளர்​கள், குழந்​தை​கள் நல அமைப்​பா​ளர்​கள், அங்​கன்​வாடி பணி​யா​ளர்​கள், சமை​ய​லர்​கள், உத​வி​யா​ளர்​கள், பஞ்​சா​யத்து செய​லா​ளர்​கள், எழுத்​தர்​கள் ஆகி​யோ​ருக்கு அளிக்​கப்​ப​டும் என்று தனது உத்​த​ர​வில் நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் தெரி​வித்​துள்​ளார்.
தமி​ழக அர​சின் அறி​விப்பு  மூல​மாக 15 லட்சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழி​யர்​கள், ஆசி​ரி​யர்​க​ளுக்கு  உயர்த்​தப்​பட்ட  அக​வி​லைப்​படி அளிக்​கப்​ப​டும்.  இதன்​மூ​லம் ரூ.300 மு​தல் ரூ.3000 வரை அக​வி​லைப்​படி உயர்வு கிடைக்​கும்  என நிதித் துறை வட்டா​ரங்​கள் தெரி​வித்​தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com