3 கோடி பிறப்பு - இறப்பு சான்​றி​தழ்​கள் ஆன்​லை​னில் பதி​வேற்​றம்: சுகா​தா​ரத் துறை முடிவு

மா​நி​லம் முழு​வ​தும்  கடந்த சில ஆண்​டு​க​ளாக பதி​வான 3 கோடி பிறப்பு - இறப்பு சான்​றி​தழ்​களை அர​சின் இணை​ய​த​ளப் பக்​கத்​தில் பதி​வேற்​றம் செய்​யும் நட​வ​டிக்​கை​களை பொது சுகா​தா​ரத் துறை மேற்​கொண்டு வரு​கி​றது.
3 கோடி பிறப்பு - இறப்பு சான்​றி​தழ்​கள் ஆன்​லை​னில் பதி​வேற்​றம்: சுகா​தா​ரத் துறை முடிவு

மா​நி​லம் முழு​வ​தும்  கடந்த சில ஆண்​டு​க​ளாக பதி​வான 3 கோடி பிறப்பு - இறப்பு சான்​றி​தழ்​களை அர​சின் இணை​ய​த​ளப் பக்​கத்​தில் பதி​வேற்​றம் செய்​யும் நட​வ​டிக்​கை​களை பொது சுகா​தா​ரத் துறை மேற்​கொண்டு வரு​கி​றது.
இந்த ஆண்டு இறு​திக்​குள் அப்​ப​ணி​கள் நிறை​வ​டை​யும் என்​றும், அதன் பின்​னர் அந்​தச் சான்​றி​தழ்​களை கட்ட​ண​மின்றி ஆன்-​லைன் மூல​மாக எப்​போது வேண்​டு​மா​னா​லும் சம்​பந்​தப்​பட்ட நபர்​கள் பதி​வி​றக்​கம் செய்து கொள்​ள​லாம் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.
இந்த நட​வ​டிக்​கை​க​ளின் வாயி​லாக போலி சான்​றி​தழ்​க​ளைத் தடுக்க முடி​யும் என​வும், பிறப்பு - இறப்பு குறித்த தக​வல்​க​ளில் வெளிப்​ப​டைத்​தன்மை உரு​வா​கும் என்​றும் சுகா​தா​ரத் துறை அதி​கா​ரி​கள் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ள​னர்.
கடந்த சில மாதங்​க​ளுக்கு முன்பு வரை சென்னை உள்​ளிட்ட ஒரு சில மாந​க​ராட்​சி​க​ளில் மட்டுமே கட்ட​ணம் ஏதும் இல்​லா​மல் பிறப்பு, இறப்பு சான்​றி​தழ்​களை இணை​ய​த​ளம் மூலம் பதி​வி​றக்​கம் செய்​யும் வசதி இருந்​தது.
அதே​வே​ளை​யில், பிற இடங்​களை எடுத்​துக் கொண்​டால், நேரில் சென்று அதற்​காக கட்ட​ணம் செலுத்தி விண்​ணப்​பிக்​கும் நடை​மு​றை​தான் பின்​பற்​றப்​பட்டு வந்​தது. இந்த முரண்​பா​டு​க​ளுக்​குத் தீர்வு காணும் நோக்​கில் பிறப்பு - இறப்பு தக​வல்​களை ஆன்-​லைன் மூலம் பதிவு செய்​யும் நடை​முறை கடந்த ஓராண்​டுக்கு முன்​னர் அம​லா​னது. இதற்​காக ஜ்ஜ்ஜ்.​ஸ்ரீழ்ள்ற்ய்.ர்ழ்ஞ் என்ற முக​வ​ரி​யில் பிரத்​யேக இணை​ய​த​ளப் பக்​கம் வடி​வ​மைக்​கப்​பட்டு பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வ​ரப்​பட்​டது.
அதன் கீழ், மாந​க​ராட்​சி​கள்,  நக​ராட்​சி​கள், பேரூ​ராட்​சி​கள் மற்​றும் ஊராட்​சி​க​ளில் பதி​வா​கும் பிறப்பு - இறப்பு தக​வல்​கள் அனைத்​தும் ஓராண்​டாக பதி​வேற்​றம் செய்​யப்​பட்​டன.
இருந்​த​போ​தி​லும், அந்த இணை​ய​த​ளத்​தில் இருந்து பொது​மக்​கள் அந்​தச் சான்​றி​தழ்​களை பதி​வி​றக்​கம் செய்ய முடி​ய​வில்லை. இந்​தச் சூழ​லில்​தான், சம்​பந்​தப்​பட்ட நபர்​கள், அந்​தச் சான்​றி​தழ்​களை எங்​கி​ருந்து வேண்​டு​மா​னா​லும், எத்​தனை பிர​தி​கள் வேண்​டு​மா​னா​லும் பதி​வி​றக்​கம் செய்​யும் வசதி கடந்த மார்ச் 4-ஆம் தேதி அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டது.
அன்​றி​லி​ருந்து தற்​போது வரை சுமார் 2 லட்சம் பேர் பிறப்​புச் சான்​றி​தழ்​களை தர​வி​றக்​கம் செய்​தி​ருப்​ப​தாக புள்​ளி​வி​வ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன. அதே​போன்று ஏறத்​தாழ 1.5 லட்சம் பேர் இறப்பு சான்​றி​தழ்​களை ஆன்-​லைன் வாயி​லா​கவே பெற்​றுள்​ள​தாக சுகா​தா​ரத் துறைத் தக​வல்​கள் கூறு​கின்​றன.
போலி சான்​றி​தழ்​க​ளைத் தடுக்​கும் வித​மாக "க்யூ​ஆர்  கோடு' எனப்​ப​டும் பிரத்​யேக குறி​யீ​டு​டன் அந்​தச் சான்​றி​தழ்​கள் வழங்​கப்​பட்​டி​ருப்​பது குறிப்​பி​டத்​தக்​கது.
இந்த நிலை​யில், பல ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய பிறப்பு - இறப்பு தக​வல்​க​ளை​யும் ஆன்-​லை​னில் பதி​வேற்​றம் செய்​யும் நட​வ​டிக்​கை​கள் முன்​னெ​டுக்​கப்​பட்​டுள்​ளன. அதில் முதல்​கட்​ட​மாக, மின்​னணு வடி​வத்​தில் (டிஜிட்​டல் காப்பி) உள்ள சான்​றி​தழ்​களை ஒருங்​கி​ணைத்து அரசு இணை​ய​த​ளத்​தில் பதி​வேற்ற முயற்​சி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
சுகா​தா​ரத் துறை தக​வல்​படி 2.5 கோடிக்​கும் மேற்​பட்ட பிறப்பு சான்​றி​தழ்​க​ளை​யும், 60 லட்சத்​துக்​கும் அதி​க​மான இறப்பு சான்​றி​தழ்​க​ளை​யும் அவ்​வாறு பதி​வேற்ற உள்​ள​தா​கத் தெரி​கி​றது. அதன் தொடர்ச்​சி​யாக, அடுத்து வரும் ஆண்​டு​க​ளில் ஆவ​ணப் பதி​வே​டு​க​ளில் உள்ள மிகப் பழ​மை​யான சான்​றி​தழ்​க​ளை​யும் மின்​னணு வடி​வத்​தில் மாற்றி ஆன்​லை​னில் வெளி​யி​டத் திட்ட​மிட்​டுள்​ள​தாக சுகா​தா​ரத் துறை அதி​கா​ரி​கள் தெரி​வித்​துள்​ள​னர்.
இது​கு​றித்து பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்​புத் துறை இயக்​கு​நர் டாக்​டர் குழந்​தை​சாமி கூறி​ய​தா​வது:
பிறப்​பு-​இ​றப்பு சான்​றி​தழ்​களை ஆன்-​லைன் மூலம் பதி​வி​றக்​கம் செய்து கொள்​ளும் நடை​மு​றை​கள் வந்த பிறகு பல்​வேறு முறை​கே​டு​கள் வெளிக் கொண​ரப்​பட்​டுள்​ளன.
தற்​போ​தைய சூழ​லில் கடந்த ஆண்​டில் இருந்து பதிவு செய்​யப்​பட்ட பிறப்​பு-​இ​றப்​புக்​கான சான்​றி​தழ்​கள் மட்டுமே இணை​ய​த​ளத்​தில் உள்​ளது. அதற்கு முந்​தைய தர​வு​கள் அனைத்​தும் அடுத்த சில மாதங்​க​ளுக்​குள் கணினி மூலம் பதி​வேற்​றப்​பட்டு, இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​ப​டும்.
அதற்​கான தொழில்​நுட்​பப் பணி​க​ளும், மென்​பொ​ருள் மாற்​றப் பணி​க​ளும் நடை​பெற்று வரு​கின்​றன. அனைத்​துப் பகு​தி​க​ளி​லும்  பதி​வா​கி​யி​ருக்​கும் பிறப்பு - இறப்பு விவ​ரங்​க​ளை​யும், சான்​றி​தழ்​க​ளை​யும் அளிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளுக்கு அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ளது என்​றார் அ​வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com