மருத்துவமனைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: அரசு மருத்துவர்கள் ஆட்சேபம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் வரும் 31-ஆம் தேதிக்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என நிர்பந்தம் செய்வது   ஏற்கபுடையதல்ல  என்று அரசு மருத்துவர்கள் சங்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் வரும் 31-ஆம் தேதிக்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என நிர்பந்தம் செய்வது   ஏற்கபுடையதல்ல  என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கும்போது அவை அனைத்துக்கும் அடுத்த ஒரு வாரங்களுக்குள் அனுமதி வழங்குவது சாத்தியமற்றது என்றும் அந்தச் சங்கம் கூறியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 51 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்பட 365 மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிச் சான்று இல்லாமல் செயல்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. 
அது மட்டுமன்றி, 715 மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான அங்கீகாரம் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. அவற்றில் 95 மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்க தகவல். இதையடுத்து உரிய உரிமமும், அனுமதியையும் வரும் 31-ஆம் தேதிக்குள் அனைத்து மருத்துவமனைகளும் பெற வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்தது. 
அவ்வாறு அனுமதி பெறத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு மருத்துவர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 30 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மருத்துவமனைகள் 10 சதவீதம்தான். 
அதுபோன்ற மருத்துவமனைகளில் இருந்துதான் அதிக அளவில் உயிரி கழிவுகள் வெளியேறும். அத்தகைய மருத்துவமனைகளை மட்டும் உரிய அனுமதி பெறுமாறு நிர்பந்திக்காமல், அனைத்து மருத்துவமனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்புடையதல்ல என  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com