தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்

புது தில்லியில் நாளை தேஜ கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருக்கிறார்.
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்


சென்னை: புது தில்லியில் நாளை தேஜ கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருக்கிறார்.

மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், தேஜ கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக்கு அமித் ஷா ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் புது தில்லியில் நாளை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி நாளை புது தில்லி செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று இரவு புது தில்லி செல்லவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com