அமைதியாக முடிந்தது 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 77.62 சதவீத வாக்குகள் பதிவாகின. மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில்  ஒட்டுமொத்தமாக 84.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 
அமைதியாக முடிந்தது 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 77.62 சதவீத வாக்குகள் பதிவாகின. மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில் ஒட்டுமொத்தமாக 84.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 

குறிப்பாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் 87 முதல் 92 சதவீதம் வரையிலான வாக்குகள்  பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அது முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவின் சராசரி அளவு 13.525 ஆக இருந்தது. 13 வாக்குச் சாவடிகளில் நடந்த மறு வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்கு சதவீதம் 12.77 ஆக இருந்தது.

அதிக அளவாக அரவக்குறிச்சியில் 84.28 சதவீத  வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

மறு வாக்குப்பதிவு: 13 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமேடு வாக்குச்சாவடியில் (195) அதிகபட்சமாக 92.11 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட வானுவம்பட்டி வாக்குச்சாவடியில் 63.91 சதவீத வாக்குகள் பதிவானது. 

பரஸ்பரம் புகார் மனுக்கள்: இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனுக்களை அளித்தன. 

வாக்காளர்களைத் தடுத்ததாகவும், பிரியாணி விநியோகம் செய்ததாகவும் திமுக மீது ஆளும் கட்சியான அதிமுக புகார் தெரிவித்து மனு அளித்தது. இதேபோன்று, ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு அதிமுக பணம் விநியோகம் செய்ததாக திமுக புகார் தெரிவித்தது. இந்தப் புகார்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பதிவான வாக்குகளும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அனைத்து வாக்குகளும் வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.


தொகுதிகளும், வாக்கு சதவீதமும்...

சூலூர்    79.41
அரவக்குறிச்சி    84.28
திருப்பரங்குன்றம்    74.17
ஓட்டப்பிடாரம்    72.61
வாக்கு சதவீதம்    77.62

13 வாக்குச்சாவடிகளில் வாக்கு சதவீதம்

195 பூந்தமல்லி மேட்டுப்பாளையம்    82.60
181 பாப்பிரெட்டிபட்டி    87.66
182 டி.அய்யம்பட்டி    89.62
(192 முதல் 196. நத்தமேடு)
192     90.46
193    89.36
194    90.92
195     92.11
196, 197 ஜாலிபுதூர்    89.37,   89.73
210 பண்ருட்டி திருவதிகை    66.51
248 காங்கேயம் திருமங்கலம்    81.74
198 ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம்    79.76
199 பெரியகுளம் வடுகபட்டி    63.91
மொத்த வாக்கு சதவீதம்    84.13
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com