ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 

சேலம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் பரிந்துரைக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு மேலாகியும் ஆளுநர் அந்தப் பரிந்துரை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திங்களன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்ட போது கூறியதாவது:

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றயது. அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே தீர்மானம்  நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com