வியாழக்கிழமை 27 ஜூன் 2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை தமிழ்

DIN | Published: 19th May 2019 01:35 AM


சென்னை:  சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வரும் 20-ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12-க்குள் வழங்க வேண்டும். இதையடுத்து ஜூன் 19-இல் நுழைவுத் தேர்வு நடைபெறும். 

விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: மத்திய அரசு
மனசத் தொட்டுச் சொல்லுங்க தண்ணீர் பஞ்சத்துக்கு மழைதான் காரணமா? நாம இல்லையா??
சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பலி 
கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி: கைதான 3 பேருக்கு 5 நாள் காவல்