புதன்கிழமை 26 ஜூன் 2019

விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு: 300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

DIN | Published: 15th May 2019 02:13 AM

ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில்  முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் 300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில், அசல் மதிப்பெண்களுக்கு பதிலாக, முறைகேடாக தேர்ச்சிக்குரிய 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்ததை, தேர்வுத்துறை கண்டுபிடித்தது. இதன் பிறகு, விடைத்தாள்கள் முழுமையாக மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த விவகாரத்தில், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறைக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படையில், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 112 பேர் என, 300 ஆசிரியர்களுக்கு, 17-பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பி, ஆசிரியர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர்: ஆணையம் உத்தரவு
பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்: நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
சட்டவிரோத பேனர்: அரசு இன்று விளக்கம் அளிக்க உத்தரவு
போதையில் இருந்து புதிய பாதைக்கு...அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் பேருக்கு மறுவாழ்வு சிகிச்சை!