சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

ஏஐசிடிஇ அனுமதி புதுப்பிக்கப்பட்ட பிறகே பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

DIN | Published: 15th May 2019 02:13 AM


ஏஐசிடிஇ (அகில  இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) அனுமதி புதுப்பிக்கப்பட்ட  பிறகே பாலிடெக்னிக் கல்லூரிகள் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
பொறியியல் கல்லூரிகளைப் போல பாலிடெனிக் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி மற்றும் அனுமதி நீட்டிப்பைப் பெற வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி புதுப்பிப்பு பெற்ற பிறகே, 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு அனுமதி புதுப்பிப்பு கிடைக்கவில்லை எனில், எந்தவொரு மாணவரையும் கல்லூரிகள் கட்டாயமாகச் சேர்க்கக் கூடாது.
இவ்வாறு அனுமதி பெறாமல் படிப்புகளை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பது, மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிப்பது, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது, அங்கீகாரத்தை ரத்து செய்வது, குற்ற வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏஐசிடிஇ 2019-20 அனுமதி வழிகாட்டுதல் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிய அனுமதி பெறாமல் சேர்க்கையில் ஈடுபடும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படாது என்பதோடு, மாணவர்கள் பதிவுக்கும், இறுதித் தேர்வு எழுதவும் அந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எச்சரித்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்பு
சிறுமிக்கு சித்ரவதை: நடிகை பானுப்பிரியா மீது வழக்கு
சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாக தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி: எஸ். குருமூர்த்தி