திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி

DIN | Published: 15th May 2019 02:53 AM


அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் 33 மையங்களில் நடத்தப்படும். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வட மாநிலங்களில் தமிழ் கற்றுத்தர அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்
நாடாளுமன்றக் குழு எச்சரிக்கையையும் மீறி அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்கள்
ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: செப்.18 முதல் அமல்
மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி 
கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்