சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

சவூதியில் செவிலியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN | Published: 14th May 2019 02:47 AM


சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குள்பட்ட ஆண்கள், பெண்களை சவூதி அரேபியாவில் செவிலியர்களாக நியமிக்க அந்நாடு முன்வந்துள்ளது. 
அதற்கான நேர்முகத் தேர்வு  கேரள மாநிலம், கொச்சியில் வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சவூதி அரேபிய அமைச்சகத்தினரால் நடத்தப்பட உள்ளது. 
அதில் கலந்துகொள்ள ஐந்து வருடப் பணி அனுபவம் அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ.80,000 வரை வழங்கப்படும்.  இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 35 நாள்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-22505886/22502267/8220634389 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது www.omcmanpower.com என்ற வலைதளத்தையோ தொடர்பு 
கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்பு
சிறுமிக்கு சித்ரவதை: நடிகை பானுப்பிரியா மீது வழக்கு
சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாக தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி: எஸ். குருமூர்த்தி