சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

அருங்காட்சியக பொறுப்பாளர் எழுத்துத் தேர்வு: மே 25-க்கு மாற்றம்

DIN | Published: 14th May 2019 01:46 AM


அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
   அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்ப வரும் 19-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19-இல் நடைபெறவுள்ளது. 
 இந்தத் தேர்தலை கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காகவும் வரும் 19-இல் நடைபெறவிருந்த தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்பு
சிறுமிக்கு சித்ரவதை: நடிகை பானுப்பிரியா மீது வழக்கு
சிக்கலான விஷயத்துக்குக்கூட சுலபமாக தீர்வு கண்டவர் ஜி.நாராயணசுவாமி: எஸ். குருமூர்த்தி