திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வது எப்படி?

By ராமநாதபுரம்| DIN | Published: 10th May 2019 07:39 AM

தென்னை மரம் பயிர் செய்துள்ள விவசாயிகள் தென்னை மரக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் இத்திட்டத்தின் மூலம் இழப்பீடு பெற முடியும்.   

இதுகுறித்து பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கே.வி.பானுபிரகாஷ் கூறியது: தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிர், வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத் தோட்டத்திலே குறைந்தபட்சம் பலன்தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்தால் தென்னை மரக் காப்பிட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். வளமான ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4 ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 7 ஆண்டு முதல் 60 ஆண்டுவரை காப்பீடு செய்யலாம்.

ஒரு ஹெக்டேருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.  திட்டத்தில் சேரும் முறை: விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது மற்றும் பராமரிப்புப் பற்றிய சுயஉறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் தங்களது அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று காப்பீட்டு தொகையினை வரவோலையாக  DD ‌i‌n ‌fa‌v‌o‌u‌r ‌o‌f  AIC ‌o‌f I‌n‌d‌ia ‌l‌t‌d,   A‌x‌i‌s Ba‌n‌k A/C ‌n‌o 006010200018027- ‌pa‌y​a​b‌l‌e a‌t c‌h‌e‌n‌n​a‌i  என்று எடுத்து தென்னை சாகுபடி சிட்டா, அடங்கல், இணைத்து வேளாண்மைத் துறை அலுவலங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  

இவ்வாண்டில் எந்த தேதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு அதற்கான இழப்பீடு வழங்கப்படும். காப்பீட்டு தொகை மானியம் 50 சதவீதம் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. மீதி 25 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டும். தென்னை மரத்தின் வயது 4 முதல் 15 வயது உள்ள மரங்களுக்கு விவசாயிகள் மரம் ஒன்றிற்கு ரூ 2.25-ம் 16 வயது முதல் 60 வயது உள்ள மரங்களுக்கு ரூ. 3.50 மரம் ஒன்றிற்கு செலுத்த வேண்டும். 

இழப்பீடு வழங்கப்படும் முறை: ஒவ்வொரு பாதிக்கப்பட்ட விவசாயியும் இழப்பீடு கோரிக்கை மனுவை பூர்த்தி செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். காப்பீடு காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ, காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றோ பராமரிக்கப்படாமலிருந்தாலோ இழப்பீடு கணக்கிடும்போது கண்டறியப்பட்டால் இழப்பீடு வழங்கப்படமாட்டாது.

ஆகவே நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு தொகை 4 வயது முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ. 900-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ. 1750-ம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.   இதில் 10-30 மரங்கள் காப்பீடு செய்யும்போது குறைந்த பட்சம் 2 மரமும், 31-100 மரங்கள் காப்பீடு செய்யும்போது குறைந்த பட்சம் 3 மரமும், 100 மரங்களுக்கு மேல் காப்பீடு செய்யும்போது குறைந்த பட்சம் 4 மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இழப்பீடு பெற தகுதியாகும் என அவர் தெரிவித்தார்.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை:  தமிழக முதல்வர் கே. பழனிசாமி உறுதி
சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் மோசடி: துப்புரவு ஊழியர் பணியிடை நீக்கம்
பூரண மதுவிலக்கு கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்