மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது அதிமுக

அதிமுக அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது என்றார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது அதிமுக

அதிமுக அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது என்றார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
 ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அவர் பிரசாரம் மேற்கொண்டார். குறுக்குச்சாலை பகுதியில் அவர் பேசியது: அதிமுக சார்பில் போட்டியிடும் மோகன் மக்களின் தேவைகளை அறிந்து தீர்த்து வைப்பதுடன் மத்திய, மாநில அரசுத் திட்டங்களைப் பெற்றுத் தருவார்.
 ஜெயலலிதா தொலைநோக்குத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் 16 லட்சம் குடிசைப் பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்கள் குறித்து கணக்கெடுத்து இன்று வரை 6 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசையில் வாழும் அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்து குடிசையே இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
 ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களைமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதில்லை என குறைசொல்ல முடியாது. இந்த ஆட்சி இன்று கவிழ்ந்துவிடும், நாளை கவிழ்ந்துவிடும் என ஜோதிடம் கூறுகின்றனர். எந்தக் காலத்திலும் மு.க. ஸ்டாலினால் முதல்வராக முடியாது. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
 முந்தைய திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத நிலை இருந்தது. அதுதான் திமுகவின் சாதனை. அதிமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதிமுக அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளிலும், 18 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார் அவர்.
 இதைத் தொடர்ந்து தருவைகுளம், மாப்பிள்ளையூரணி, தேவர் காலனி, கோரம்பள்ளம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அவருடன், அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, ஆர்.காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், வேட்பாளர் பெ. மோகன், கூட்டணிக் கட்சியினர் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com