அதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டினார். அது நடக்காததால், தற்போது கட்சியை உடைக்கச் சதி செய்கிறார். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும்
அதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டினார். அது நடக்காததால், தற்போது கட்சியை உடைக்கச் சதி செய்கிறார். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் தோல்வி பயம் ஏற்பட்டதன் காரணமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
 சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்த முதல்வர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்களிலும் தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசார உத்திகளை மாற்றி, மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரத்துடன் பேரவைத் தலைவரிடம் அதிமுக புகார் அளித்தது.
 இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஏன் ஆவேசமடைய வேண்டும். திமுகவுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதன்மூலம் திமுக-வுக்கும், அமமுக-வுக்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகி விட்டது.
 தேவை இல்லாமல் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
 ஏற்கெனவே ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதித் திட்டம் தீட்டினார். அது நடக்காததால், தற்போது கட்சியை உடைக்கச் சதி செய்கிறார். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் தோல்வி பயம் ஏற்பட்டதன் காரணமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
 நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்:
 உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. மாநில அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆணையம் அறிவித்துள்ளபடி, அடுத்த மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நம்புகிறோம். உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில், திமுக நீதிமன்றத்துக்குச் சென்றதால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும், அதிமுக அதை எதிர்கொள்ளும்.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத 1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் பிரச்னையில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
 ஏற்கெனவே அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தில்லி மாணவர்களின் வேலைவாய்ப்பை தமிழக மாணவர்கள் தட்டிப் பறிப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்இப்படிக் கூறுகிறார்.
 குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பா?
 குறுவைப் பாசனத்தைப் பொருத்தவரை, இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com