திங்கள்கிழமை 20 மே 2019

ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகிவிடும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

DIN | Published: 06th May 2019 12:52 AM

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகிவிடும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
 அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புறவழிச்சாலை ரவுண்டானா, தளவாபாளையம் கடைவீதி, புன்னம்சத்திரம், சின்னதாராபுரம் பேருந்து நிறுத்தம், எல்லமேடு பிரிவு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து அவர் மேலும் பேசியது:
 இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதிமுகவில் அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிகளுக்கு மாறியவர். அதிமுகவை முடக்க வேண்டும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என எதிரிகளோடு கூட்டு சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தார். செந்தில்பாலாஜிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
 ஆட்சி, அதிகாரம் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்தால் உங்களது பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
 புஞ்சைப்புகழூரில் புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.290 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.490 கோடியில் கதவணை கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. டிஎன்பிஎல் ஆலையில் புதிதாக சிமென்ட் ஆலை கொண்டுவரப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ராகுல் காந்தி காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஸ்டாலின் அறிவித்தவர் பிரதமரானால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடை
 க்காது.
 ஸ்டாலின் தேர்தல் முடியும் முன்னரே முதல்வராகிவிட்ட கனவில் இருக்கிறார். உங்களது கனவு கானல் நீராகிவிடும். மக்கள் நினைத்தால்தான் முடியும். ஆட்சிக்கு வந்துவிடுவோம் எனக் கூறும் நீங்கள், ஏன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறீர்கள் என்றார்.
 பிரசாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேட்பாளர் செந்தில்நாதன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்பி. குமார் மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்
இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?