திங்கள்கிழமை 20 மே 2019

"நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து பலி

DIN | Published: 06th May 2019 02:51 AM

மதுரையில் "நீட்' தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய போது மயங்கி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா (17). மாற்றுத்திறனாளி ஆவார். இவர் "நீட்' தேர்வு எழுதுவதற்காக மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். தேர்வு முடித்துவிட்டு மாலையில் பேருந்தில் ராமநாதபுரம் புறப்பட்டார். திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
 இதையடுத்து உடனடியாக அவரை பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள்அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். "நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?
தேஜ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் நாளை; துணை முதல்வர் இன்று தில்லி பயணம்
இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?