7-இல் அட்சய திருதியை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தங்க டாலர்கள் விற்பனை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன்  கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு  மே 7 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
7-இல் அட்சய திருதியை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தங்க டாலர்கள் விற்பனை


மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன்  கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு  மே 7 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பக்தர்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்த ஆண்டும் ஐயப்பன், குருவாயூரப்பன்  பொறிக்கப்பட்ட 2, 4, 8 கிராம் தங்க லாக்கெட்டுக்கள் விற்பனைக்கு உள்ளன. பூஜையில் வைக்கப்பட்ட டாலர்களை வாங்க முன்பதிவுக்கும், மேலும் தகவல்களுக்கும் 044-28171197, 28172197 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com