திங்கள்கிழமை 22 ஜூலை 2019

இரட்டை இலையும் இல்லை, குக்கரும் இல்லை: ஒரு பொதுச் சின்னமாவது கிட்டுமா?

DIN | Published: 26th March 2019 01:00 PM


புது தில்லி: குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு கோரிய டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் வைத்த முறையீட்டை நிராகரித்துவிட்டது.

தினமணியின் தேர்தல் பக்கத்தை பின்தொடர..

முன்னதாக, விசாரணையின் போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது.

அமமுகவை கட்சியாக இன்றைக்கே பதிவு செய்யத் தயார். கட்சியை இன்றே பதிவு செய்தால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

அளவுக்கு அதிகமான சுயேச்சைகளால் திக்குமுக்காடிய பொதுத் தேர்தல் பற்றிய சுவாரஸ்ய தகவல்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரே நேரத்தில்  இரட்டை இலைச் சின்னத்தையும், குக்கர் சின்னத்தையும் கோருவது ஏன்? என்று கேளவி எழுப்பினர்.

விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது, அமமுகவை கட்சியாக பதிவு செய்தாலும் உடனடியாக குக்கர் சின்னத்தை தர முடியாது என்று  தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

கட்சியைப் பதிவு செய்து 30 நாட்களுக்குப் பிறகுதான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். எனவே, தினகரன் கட்சிக்கு உடனடியாக குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அளிக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

மக்களவைத் தேர்தல்: இந்த விஷயத்தில் மட்டும் திமுக, அதிமுக மௌனம் காப்பது ஏன்?

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று, தினகரனின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அதே சமயம், குறுகிய காலமே இருப்பதால், காலத்தைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு ஏதேனும் ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கே என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் வரலாறுகள் ஆளுங்கட்சிக்கே சாதகம்: வரலாறு திரும்புமா?

கடைசியாக அமமுக சார்பில் ஒரு பொதுச் சின்னம் கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுகவினருக்கு ஒரு பொதுச் சின்னத்தையாவது ஒதுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்