வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்

வங்கிகளை இணைப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்


வங்கிகளை இணைப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாங்க் ஆப் பரோடா சார்பில் தி கிராண்ட் 3.0 கண்காட்சி தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்து ராஜேஷ் மல்ஹோத்ரா கூறியது:
ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பாங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கியும், தேனா வங்கியும் இணைக்கப்படும். இதன்மூலம் வங்கிகள் வலுவடைவதுடன், கடன் வழங்கும் திறனும் அதிகரிப்பதுடன், இந்தியாவின் 2-ஆவது பெரிய வங்கியாக பாங்க் ஆஃப் பரோடா உருவாகும். வங்கிகள் இணைப்பால் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்அவர். இதில் நொய்ஜி பாக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் சப்லோக் உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com