தகவல் தொழில்நுட்பப் பகுதியாக மிளிரப் போகிறது ஆவடி: வருகிறது ரூ.230 கோடியில் ஐடி பூங்கா

ஆவடி - பட்டாபிராம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான நுழைவு அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பகுதியாக மிளிரப் போகிறது ஆவடி: வருகிறது ரூ.230 கோடியில் ஐடி பூங்கா


சென்னை: ஆவடி - பட்டாபிராம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான நுழைவு அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதன் மூலம் தரமணி போல ஆவடியும் வெகு விரைவில் தகவல் தொழில்நுட்பப் பகுதியாக மாற உள்ளது.

டைடல் பார்க் அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்திருப்பதன் மூலம், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி, அங்கு கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம் என்பது அர்த்தமாகிறது.

இதன் மூலம் ஆவடி தொழில்நுட்ப பகுதியாக மாறும் வாய்ப்போடு, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.

இப்பகுதியில் தொழில்நுட்பப் பூங்காவுக்கான கட்டடம் கட்டும் பணி 2019 ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021ம் ஆண்டு நிறைவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com