மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா: கன்னியாகுமரியில் 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை  

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு வருகிற 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா: கன்னியாகுமரியில் 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை  

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு வருகிற 12ந்தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  "பெண்களின் சபரிமலை" என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படும்  இந்த கோயில் திருவிழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.  இதன்பின் கொடியேற்றப்பட்டு வழக்கமான பூஜைகளும் நடந்தன.

இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 12ந்தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com