தமிழ்நாடு

திமுக என்ன அகதிகள் முகாமா? கொந்தளிக்கிறதா தேனி திமுக நிர்வாகிகள் தரப்பு?

29th Jun 2019 02:37 PM

ADVERTISEMENT


டிடிவி தினகரனின் தலைமையில் இயங்கும் அமமுக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.

தேனியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் சேர்த்துக் கொள்வதால், தேனிப் பகுதியில் திமுகவின் பலம் சற்று அதிகரிக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களோ, தங்க தமிழ்ச்செல்வன் வருகையால் அதிருப்தி அடைந்துள்ளதாகவே தெரிகிறது.

தங்க தமிழ்ச்செல்வன் வருகையால் தேனியில், திமுகவினர் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்குதான் ஏற்படும் என்று கருதுகிறார்கள்.

இது குறித்து தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் எக்ஸ்பிரஸ் குழுவினரிடம் கூறுகையில், தங்க தமிழ்ச்செல்வன் முன்பு கருணாநிதி பற்றியும், ஸ்டாலின் பற்றியும் பேசிய பேச்சுக்களை நினைவு கூருகிறார்கள். அவர் பேசியதை திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை யாருமே மறக்கவில்லை. அவரை கட்சியில் ஒருவராக நினைப்பது கடினமான காரியம் என்கிறார்கள்.

ADVERTISEMENT

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த புதிய இணைப்பால், கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் ஒரு சில பிளவுகள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் பட்டவர்த்தனமாகக் கூறுகிறார்கள்.

தேனியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், கட்சி என்ன அகதிகள் முகாமா? வேறு கட்சியில் இருந்து விரட்டப்படும் நபர்களை சேர்த்து ஆதரித்து பதவிகள் வழங்க? தங்க தமிழ்ச்செல்வன் இல்லாமலேயே நாம் ஏற்கனவே ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, தங்க தமிழ்ச்செல்வனால் கட்சிக்கு அப்படி என்ன நன்மை வந்து சேரப்போகிறது என்று தெரியவில்லை என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT