தமிழ்நாடு

நெல்லை-தாம்பரத்துக்கு வந்தடையும் அந்யோதயா ரயில் நேரம் குறைகிறது

29th Jun 2019 02:45 AM

ADVERTISEMENT


திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு வந்து சேரும் அந்யோதயா ரயில் நேரம் குறைகிறது.  இதுதவிர, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு வந்துசேரும், புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில்நிலையத்தில்...: திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் ரயில்நிலையத்துக்கு தினசரி காலை 9.45 மணிக்கு வந்தடையும் அந்யோதயா விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, தாம்பரம் ரயில்நிலையத்துக்கு காலை 7.35 மணிக்கு வந்து சேரும். 
செங்கல்பட்டு ரயில்நிலையத்தில்.. காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு ரயில்நிலையத்துக்கு  தினசரி 8.20 மணிக்கு வந்து சேரும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு,  தினசரி காலை 7.40 மணிக்கு வந்து சேரும். செங்கல்பட்டில் இருந்து கச்சிகூடாவுக்கு தினசரி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, 10 நிமிஷம் முன்னதாக  பிற்பகல் 3.20க்கு புறப்படும். 
ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில்..ஜோலார்பேட்டையில் இருந்து தினசரி அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும் ஏலகிரி ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு புறப்படும். ரயில்களின் நேரம் மாற்றம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT