தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

29th Jun 2019 01:39 AM

ADVERTISEMENT


பேரவைக் கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைக்கு  முன்னுரிமை கொடுத்துப் பேச வேண்டும் என்று  திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின்  ஆலோசனை வழங்கினார்.
 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி,  சட்டப்பேரவைக் கொறடா அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசும்போது, மக்கள் பிரச்னைக்கு திமுக உறுப்பினர்கள் முன்னுரிமை கொடுத்துப் பேச வேண்டும். வீணான விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது. பேரவையில்  வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திமுக கொறடா உத்தரவை அனைவரும் மதித்துச் செயல்பட வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT