போக்குவரத்துத் துறையில் 400 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 400 புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போக்குவரத்துத் துறையில் 400 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கம்


அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 400 புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை முதல் பிப்ரவரி  வரை 2,316  புதிய பேருந்துகள் வழங்கப்பட்டன. இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகளும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 82 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டன. 
அதே போல் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேரத்தின்போது  எந்த அறிவிப்புமின்றி புதிய பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்டன.  
 தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 675 வழித்தடங்களில் 1100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். 
இந்நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்துக்கு  புதிதாக 200 பேருந்துகளை வழங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதில் சில பேருந்துகள் மிகவும் நெரிசலான பகுதியில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாகவும், மற்றவற்றை தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியது:   400 புதிய பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், மற்ற ஐந்து போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. இதனை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். சில நாள்களுக்கு முன் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 140 பேருந்துகளும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 100 பேருந்துகளும் அயனாவரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டன. அதில் விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட  பேருந்துகளில் சொகுசு பேருந்துகள், ஏசி ஸ்லீப்பர் போன்ற பேருந்துகளும் அடங்கும். 
சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மற்ற பேருந்துகளுக்கான பதிவுப் பணிகளும் விரைவில் முடிவடையும். பேருந்துகளுக்கான வழித் தடம் குறித்த தகவல்கள் பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகே தெரிய வரும் என்றார்.
விரைவுப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள  புதிய பேருந்துகளில் இதுநாள் வரை தமிழக நகரங்களில் இருந்து நேரடியாக கேரளத்தின் முக்கிய பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாத வழித்தடங்களில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com