திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களில் ஜூன் மாதம் ரூ. 1.32 கோடியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோர்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களில் ஜூன் மாதம் ரூ. 1.32 கோடியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை தலைமையில் நடைபெற்ற பணியில், உதவி ஆணையர்கள் தூத்துக்குடி சு. ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் வே. செல்வராஜ், அறநிலையத் துறை ஆய்வாளர் மு. முருகன், தக்கார் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில், சு. வேலாண்டி,  இரா. மோகன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 
இதன்படி, கோயில் நிரந்த உண்டியல்களில்  ரூ.1 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரத்து 255-ம், மேல கோபுரத் திருப்பணி  உண்டியலில் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 735-ம், கோசாலை உண்டியலில் ரூ. 75 ஆயிரத்து 705-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 25 ஆயிரத்து 409-ம், கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 5 லட்சத்து 61 ஆயிரத்து 864-ம், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 6 ஆயிரத்து 506 என மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்து 474 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 
மேலும், தங்கம் 1,610 கிராம், வெள்ளி 11,480 கிராம், வெளிநாட்டு பணத்தாள் 242-ஐ பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com