கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: மத்திய அரசு

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: மத்திய அரசு


புது தில்லி: கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர  சிங் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.

அதில், கூடங்குளம் பகுதியில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அணு உலைக் கழிவு மேலாண்மை ஆணையம் 2013ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. சேமித்து வைக்கும் அணுக் கழிவுகள், நாளாக நாளாக வீரியம் குறைந்துவிடும். 

எனவே, கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாதது.

கூடங்குளம் அணு ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே குறிப்பிட்ட அளவில்தான் அணுக் கதிர்வீச்சு உள்ளது என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com