21 ஜூலை 2019

சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

DIN | Published: 27th June 2019 02:37 PM

சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்புப் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட தகவல் படி ஃப்ரிட்ஜ் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 3 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்