21 ஜூலை 2019

சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 9 கடைசி

DIN | Published: 27th June 2019 01:23 AM


சென்னைப் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான ஏப்ரல் மாதத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட உள்ளன.
முடிவுகளை results.unom.ac.in, www.ideunom,ac.in, egovernance.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மறுமதிப்பீடு: தேர்வுத் தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளநிலை, முதுநிலை பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி மூலமாக ஜூலை 2 முதல் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த மறுமதிப்பீடு விண்ணப்பத்துடன் ஒரு பாடத்துக்கு ரூ. 1000 வீதம் வரைவோலையாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 300 வீதம் கட்டணம் செலுத்தி ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.
உடனடி தேர்வு: இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்து பாடங்களிலும், செய்முறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, ஆறாவது பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
அதுபோல, முதுநிலை பட்டப்படிப்பில் மூன்றாம் பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களிலும், செய்முறைத் தேர்விலும் தேர்ச்சிபெற்று, நான்காம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்திருப்பவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். உடனடி தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கல்லூரி மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்