திங்கள்கிழமை 22 ஜூலை 2019

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

DIN | Published: 27th June 2019 01:43 PM

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பதவிவகித்து வந்தார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் இவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது. 

கட்சி விரோத நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுதியது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சந்திரயான்-2: விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? அறிக்கை கேட்கும் சென்னை உயர் நீதிமன்றம் 
மதுரை: பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”: சந்திராயனுக்கு  கவிஞர்  வைரமுத்து வாழ்த்து 
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த ராமதாஸ் வேண்டுகோள்