நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை கடந்த வாரத்தைப் போலவே இன்றும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.
நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை


சென்னை: ஆபரணத் தங்கம் விலை கடந்த வாரத்தைப் போலவே இன்றும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.3,308க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, ஒரு சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.26,464க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நடுத்தர குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று வெள்ளி விலையும்  உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.41.40க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.41,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com