அபாயச் சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய 774 பேர் கைது: இழப்பைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்

நிகழாண்டில் ஓடும் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய வகையில், நிகழாண்டில்  774 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க பயணிகளிடம் விழிப்புணர்வை
அபாயச் சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய 774 பேர் கைது: இழப்பைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்

நிகழாண்டில் ஓடும் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய வகையில், நிகழாண்டில்  774 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என வலியுறுத்துப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் தினசரி 1,305 விரைவு மற்றும் சாதாரண பயணிகள் ரயில்களும், 652  மின்சார மற்றும் டெமு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் 24 லட்சம் பேர் தினமும் பயணிக்கின்றனர். 
ரயில்களில் ஏதேனும் தீ விபத்துகள் மற்றும் வழிப்பறி-திருட்டு சம்பவங்கள் நடைபெற்றாலோ அல்லது யாரேனும் தவறி விழுந்தாலோ ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவதுதான் வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், அண்மைக் காலமாக படிக்கட்டுகளில் நின்று பயணிக்கும் பயணிகள், கீழே தவறி விழும் தங்களது செல்லிடப்பேசிகளை எடுக்கவும், ரயில் நிலையத்தில் தவற விட்ட பொருள்களை எடுக்கவும் அபாயச் சங்கிலியை இழுத்து, ரயில்களை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இதுபோன்ற சிறு, சிறு காரணங்களுக்காக அபாயச் சங்கிலியை இழுத்து  ரயில்களை நிறுத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ. 1,000 அபாரமும், அல்லது ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்க, இந்திய
 ரயில்வே சட்டம் 1989, பிரிவு-141 வழிவகை செய்துள்ளது. அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில்களை நிறுத்திய வகையில், நிகழாண்டில் கடந்த மே மாதம் வரை மொத்தம் 775 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அபராதத் தொகையாக ரூ. 3.72 லட்சம்  வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரயில்வே  எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் கூறியது: அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தப்படும் ரயில்கள் சரிசெய்து மீண்டும் புறப்பட குறைந்தது 20 நிமிடங்களாகும். ரயில்கள் தாமத நிகழ்வுக்கு இதுபோன்ற காரணங்களே முக்கியமானதாகும். 
மேலும், சுமார் 100 கி.மீ. வேகத்தில் 20 பெட்டிகளுடன் சென்றுகொண்டிருக்கும்  ஒரு  விரைவு ரயில் (டீசல் என்ஜின்), நின்று அதன் பின்னர் இயக்கப்பட்டால் ரூ. 21,207 தொகையும், மின்சார என்ஜினில் இயங்கும் ரயில் நின்று சென்றால் ரூ.12,820-மும்  இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையினர், பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com