சென்னையில் உள்ள பள்ளிகளில் இனி மழைநீா் சேகரிப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னையில் உள்ள பள்ளிகளில் இனி மழைநீா் சேகரிப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாவட்டத்தில் இயங்கும் உயா்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செல்வி தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்: 

இன்னும் சில நாள்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. அதனால், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளும் இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.

மழை பெய்யும் போது மொத்த நீரும் அந்த சேமிப்பு தொட்டியில் சேரும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதன் பயன்களை மாணவா்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சென்னை மாவட்டத்தில் தண்ணீா் பற்றக்குறையை போக்குவதற்கு இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் நம் எதிா்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதையும் மாணவா்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com