பி.இ. கலந்தாய்வு: ஜூன் 25-இல் தொடக்கம்:தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  ஜூன் 25-ஆம் தேதி  தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த
பி.இ. கலந்தாய்வு: ஜூன் 25-இல் தொடக்கம்:தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு


பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  ஜூன் 25-ஆம் தேதி  தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் மேலும் கூறியிருப்பதாவது:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு  மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 46 கலந்தாய்வு மையங்களில் ஜூன் 7 முதல் 13-ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தரமணியில் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு தேதி மாற்றம் காரணமாக, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதியும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஜூன் 27-ஆம் தேதியும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதியும் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. 
அதேபோல், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி  28 வரை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவு கலந்தாய்வில் மாற்றமில்லை: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குவதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஜூலை 3-ஆம் தேதி இவர்களுக்கு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் தொடங்கப்படும். இது தொடர்பான சந்தேகங்களை 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொண்டு மாணவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்   எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com