மருத்துவப் படிப்புகள்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூன் 19 முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆன்லைன் முறையில் கல்லூரிகளைத்  தேர்வு செய்யலாம் என்றும், தரவரிசைப்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிப் பட்டியல் 27-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 எம்பிபிஎஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் (506 எம்பிபிஎஸ் இடங்கள்; 15 பிடிஎஸ் இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகின்றன.
இவை தவிர நிகழாண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பெருந்துறை சாலைப் போக்குவரத்து மருத்துவக் கல்லூரியில் (ஐஆர்டி) உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட உள்ளன. 
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) இந்த மாத இறுதியில் நடத்த உள்ளது.
www.mcc.nic.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.  அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அந்த இணையதளத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தங்களது நீட் தேர்ச்சி விகித அடிப்படையில் பதிவு செய்து, விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
அந்தக் கல்லூரிகளை 25-ஆம் தேதி உறுதி செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்களை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகள் 26-ஆம் தேதி நடைபெறும். அதன் பின்னர் இட ஒதுக்கீடு தொடர்பான இறுதி விவரங்கள் 27-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் 28-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். 
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு ஜூலை 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com