நடிகர் சங்கத் தேர்தல் 69 வேட்புமனுக்கள் ஏற்பு: விமல், ரமேஷ் கண்ணா மனு நிராகரிப்பு

நடிகர் சங்கத் தேர்தலில்  நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 69 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. 
நடிகர் சங்கத் தேர்தல் 69 வேட்புமனுக்கள் ஏற்பு: விமல், ரமேஷ் கண்ணா மனு நிராகரிப்பு


நடிகர் சங்கத் தேர்தலில்  நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 69 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. 
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
சுவாமி சங்கரதாஸ் அணி: பாண்டவர் அணியை எதிர்த்துப் போட்டியிடும் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணியில்  நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இந்த இரு அணிகளின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 69 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.  நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com